தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேவு பார்த்ததாகச் சந்தேகம்; நார்வேயில் மலேசிய மாணவர் கைது

1 mins read
8d794220-4ed0-4919-8920-e61915f1d7be
25 வயது மலேசிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: தமிழ் முரசு

ஓஸ்லோ: வேவு பார்த்ததாக 25 வயது மலேசிய மாணவரை நார்வே கைது செய்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அவர் ஒட்டுக்கேட்டதாகவும் நார்வே ஊடகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக மலேசியா மீது எவ்வித சந்தேகமும் நார்வேக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர் இம்மாதம் 8ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாக நார்வேயின் உளவியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். நார்வேயை வேவு பார்த்ததாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த ஆடவர் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து, நார்வே பிரதமரின் அலுவலகம், தற்காப்பு அமைச்சின் கட்டடம், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள மற்ற அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அருகில் ஓட்டிச் சென்று நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலகம், தற்காப்பு அமைச்சு, மற்ற அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள மின்தொடர்புச் சாதனங்களை ஊடுருவ அவர் முயன்றதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஆடவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

நார்வே அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று அறியப்படுகிறது.

எந்த நாட்டுக்காக அவர் வேவு பார்த்தார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்