வெளிநாட்டில் பாரந்தூக்கி கவிழ்ந்து இந்தியர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பாரந்தூக்கி கவிழ்ந்து இந்தியர் உயிரிழப்பு

தமிழ் முரசு

12 Sep 2023 - 8:48 pm

1 mins read

அபுதாபி: பாரந்தூக்கி கவிழ்ந்து விழுந்ததில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அபுதாபியில் நிகழ்ந்தது.

மாண்டவர் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த சஜீவ் அலியார் குஞ்சு, 40, என அடையாளம் காணப்பட்டது.

‘செவன் டேஸ்’ என்ற மனிதவள நிறுவனத்தில் சஜீவ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். பணியிடத்தில் இருந்தபோது இவ்விபத்து நேரிட்டதாக மாத்ருபூமி செய்தி தெரிவித்தது.

விபத்து எப்போது நிகழ்ந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

உயிரிழந்த சஜீவுக்கு ஷீபா என்ற மனைவி இருக்கிறார். சஜீவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்