ஹனோய்: வியட்னாமின் தலைநகர் ஹனோயில் ஒன்பது மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்ததில் 30 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் பலரும் தீப்புண் அடைந்ததாக அதிகாரபூர்வ விஎன்ஏ செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
எத்தனை பேர் மாண்டார்கள் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் இன்னமும் தெரியவில்லை என்று புதன்கிழமை அதிகாரிகள் கூறினர்.
அந்தக் கட்டடத்தில் 150 பேர் வசித்து வந்ததாகவும் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் திடீரென்று தீ மூண்டுவிட்டதாகவும் இருந்தாலும் அதிகாலை 2 மணி வாக்கில் தீ அணைக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இரவு நேரத்தில் தீ அணைக்கப்பட்டதை அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தொலைக்காட்சிகள் காட்டின.
காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

