வாஷிங்டன்: கொவிட்-19 பெருந்தொற்றின்போது அமெரிக்க மாநிலங்கள் வழங்கிய US$135 பில்லியன் (S$183.8 பி.) வரை பெறுமானமுள்ள வேலையில்லா அனுகூலங்கள், மோசடிக் கோரிக்கைகளால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று வாஷிங்டனின் அரசாங்கக் கண்காணிப்புக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முன்னதாக மதிப்பிடப்பட்டதைவிட இந்தப் பிரச்சினை மேலும் பெரியது என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
2020 ஏப்ரலுக்கும் இவ்வாண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வேலையில்லா அனுகூலமாக வழங்கப்பட்ட ஏறக்குறைய US$900 பில்லியன் தொகையில் US$100 பில்லியன் முதல் US$135 பில்லியன் வரையிலான தொகை மோசடிக் கோரிக்கைகளால் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பெருந்தொற்றின்போது வேலையில்லா அனுகூலம் தொடர்பான மோசடியின் முழு அளவு தெரியாமலேயே போகலாம் என அறிக்கை குறிப்பிட்டது.