பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் தீ விபத்து; ஏராளமான கடைகள் நாசம்

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் தீ விபத்து; ஏராளமான கடைகள் நாசம்

1 mins read
95a57d5f-5e42-4d07-a570-1017bb7dac2f
 பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள முகம்மத்பூர் கிரிஷி என்ற சந்தையில் மூண்ட தீயில் நூற்றுக்கணக்கான கடைகள் அழிந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள முகம்மத்பூர் கிரிஷி என்ற சந்தையில் மூண்ட தீயில் நூற்றுக்கணக்கான கடைகள் அழிந்தன.

இருந்தாலும் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தீ மூண்டதால் உயிர்ச் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சந்தையில் சமையல் எண்ணெய், பிளாஸ்டிக் பொருள்கள் ஏராளமாக இருந்ததால் தீ மளமளவனப் பரவியது. தீயணைப்பாளர்கள் ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்துக்கு மின் கசிவே காரணம் என்று தெரிவதாக ஷாஜஹான் சிக்தர் என்ற தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார்.

“கடையை நம்பித்தான் என் குடும்பம் உயிர் வாழ்ந்தது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்று கடைக்காரர் ஒருவர் கதறினார்.

தலைநகர் டாக்காவில் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். நெருக்கமாக வாழ்கிறார்கள், அங்கு தீ விபத்துகள் அதிகம் நடக்கிறது. பொதுவாக எரிவாயுத் தோம்புகள், குளிர்சாதனங்கள், மின்கசிவு ஆகியவையே காரணமாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்
பங்ளாதேஷ்

தொடர்புடைய செய்திகள்