தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரானிடம் விளக்கம் கேட்கும்நான்கு நாடுகள்

1 mins read
65473568-b902-4fe4-9f51-85b9672f7895
ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெஹ்ரானில் நவீன அணு ஆலை வசதிகளைப் பார்வையிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ் கோப்புப்படம்

லண்டன்: ஈரான் அணு ஆயுதச் சாதனங்கள் தொடர்பிலான விவகாரங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கவில்லை என்றால், சட்டபூர்வமான தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அனைத்துலக அணுசக்தி முகவையிடம் தெரிவித்து உள்ளன.

அந்த நான்கு நாடுகளும், செப்டம்பர் 13ஆம் தேதி அந்த அனைத்துலக முகவையின் நிர்வாக சபையிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தன.

ஈரான் அணுசக்தி சாதனங்களையும் கெட்டுப்போய்விட்ட சாதனங்களையும் எங்கே வைத்து இருக்கிறது என்பதைப் பற்றி காலம்தாழ்த்தாமல் உடனடியாக எல்லா விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் அந்த நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்