வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துப் போட்டியிட இலக்கு கொண்டுள்ளார் 38 வயது செல்வந்தரான விவேக் ராமசாமி.
அண்மைக் காலமாக அவர் பல தீவிர பரிந்துரைகளை முன்வைத்து வருகிறார். அந்த வரிசையில் தாம் அதிபரானால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் கூட்டரசு புலனாய்வுத் துறை உட்பட ஐந்து அரசாங்க அமைப்புகளை மூட இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும் ஊழலைத் தடுக்கவும் இவ்வாறு செய்ய முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கூட்டரசு அதிகாரத்துவ அணுகுமுறைக்கு எதிராக திரு விவேக் ராமசாமியின் உரை அமைந்தது.

