‘நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உளவுத்துறையினரை ரஷ்யா செயலிழக்கச் செய்துள்ளது’

‘நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உளவுத்துறையினரை ரஷ்யா செயலிழக்கச் செய்துள்ளது’

1 mins read
d45e67ab-9835-4bf4-82ec-68084ddee535
ரஷ்யாவின் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் இவ்வாறு கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யா அண்மைய ஆண்டுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உளவுத்துறை அதிகாரிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அந்நாட்டின் முன்னணி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகளுக்குப் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர், நமது நாட்டுக்கும் உத்திபூர்வ பங்காளி நாடுகளுக்கு எதிராகவும் உளவு மற்றும் அதிகாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் அண்மைய ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளனர்,” என்று ரஷ்யாவின் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளரான நிக்கொலாய் பட்ருஷெவ் ரஷ்ய உளவுத்துறை சஞ்சிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவரான திரு பட்ருஷெவ், அந்நாட்டின் மத்திய பாதுகாப்புச் சேவையின் (எஃப்எஸ்பி) முன்னாள் இயக்குநர் ஆவார். அவர், கடுமையான கொள்கைகளை ஆதரிக்கும் ரஷ்ய அரசாங்க அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

குறிப்புச் சொற்கள்