உக்ரேனுக்குக் கூடுதல் உதவி அளிக்கும் அமெரிக்கா

1 mins read
1fb6be12-1100-441e-a146-cf632a68a865
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (வலது), உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் வரவேற்று உபசரிப்பார் என்று கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கா அடுத்த வாரம் உக்ரேனுக்குக் கூடுதல் உதவியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதிபர் ஜோ பைடன், வரும் வியாழக்கிழமை, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வரவேற்று உபசரிப்பார் என்றார் அவர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உக்ரேனிய அதிபர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திறன் வாய்ந்த ஏவுகணைகள், கொத்து வெடிகுண்டுகள் போன்றவற்றை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாக கடந்த திங்கட்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

கியவ் இத்தகைய உதவியை வாஷிங்டனிடம் நீண்ட நாள்களாகக் கேட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்