கோலாலம்பூர்: இவ்வாண்டின் மலேசிய தினத்தின் உண்மையான உணர்வை அரவணைக்குமாறு மலேசியர்களைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியா வலுவான நிலையில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர், பாரபட்சத்தை எதிர்த்து புரிந்துணர்வையும் அன்பையும் மக்கள் வெளிக்காட்டினால் நாடு தொடர்ந்து முன்னேறும் என்றார்.
“அனைவருக்கும் மலேசிய தின வாழ்த்துகள்” என்று ஃபேஸ்புக்கில் சனிக்கிழமை அவர் பதிவிட்டார்.
இதற்கிடையே, மலேசியாவில் செயல்பட்டுவரும் வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்கள், 60வது மலேசிய தினத்தை முன்னிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இவ்வாண்டின் மலேசிய தின நிகழ்வு கூச்சிங்கில் உள்ள யூனிட்டி அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
இவ்வாண்டுக் கொண்டாட்டம் 2023 தேசிய தினத்தின் அதே கருப்பொருளைக் கடைப்பிடிக்கிறது. ‘ஐக்கியத்தில் தீர்மானம், நம்பிக்கையை நிறைவேற்றுதல்’ என்பது அந்தக் கருப்பொருள்.

