பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் மரணம்

பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் மரணம்

1 mins read
2d9fa73c-a2a9-4300-bd0e-e688c92486f4
விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளும் இரண்டு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சாவ் பாவ்லோ: பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள அமேசோனா மாநிலத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 12 பயணிகளும் இரண்டு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து சனிக்கிழமை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய விமானம் ‘மானவ்ஸ் ஏரோடாக்சி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகஅந்நிறுவனம் தெரிவித்தது.

விபத்தில் சிக்கியவர்களின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

கடுமையான மழை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் விமானம் தரையிறங்கும் நேரத்தில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்