ஆடம்பரக் கைப்பையுடன் வடகொரியத் தலைவரின் சகோதரி

1 mins read
236b001e-c10a-48dc-a0fb-f5a922e706de
கிம் குடும்பத்தினரின் ஆடம்பரப் பொருள் மோகம் குறித்து வெளிநாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அண்மையில் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின்போது 7,000 அமெரிக்க டாலர் (S$9,500) மதிப்புள்ள ஆடம்பரக் கைப்பையை வைத்திருந்தார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு நிறுவனமான கிறிஸ்டியன் டியோர் தயாரித்த கைப்பை அது எனக் கருதப்படுகிறது.

நிறுவனம் அண்மையில் இணையம்வழி விற்பனை செய்த கறுப்புக் கைப்பையை அது ஒத்திருந்தது.

கிம் குடும்பத்தினர் ரஷ்யாவின் யூரி கேகரின் போர் விமானத் தொழிற்சாலையைப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அந்தக் கைப்பையை கிம் யோ ஜோங் வைத்திருப்பதைக் காணமுடிந்தது.

குறிப்புச் சொற்கள்