30 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்தில் பெண் நிதியமைச்சர்

30 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்தில் பெண் நிதியமைச்சர்

1 mins read
582421cc-4d71-4c89-a7bd-a6f1b82d56f4
அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய கட்சி வெற்றி பெற்றால், திருவாட்டி நிக்கோலா வில்லிஸ், நியூசிலாந்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பார். முப்பது ஆண்டுகளில் அந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெறுவார். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தில், அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய கட்சி வெற்றி பெற்றால், திருவாட்டி நிக்கோலா வில்லிஸ், நியூசிலாந்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பார்.

முப்பது ஆண்டுகளில் அந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெறுவார். நாட்டின் இரண்டாவது பெண் நிதியமைச்சர் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைக்கும்.

நியூசிலாந்தில் கடந்தகால பொதுத் தேர்தல்களுக்கு முன்பான விவாதங்களில் முக்கியப் பங்காற்றியவர் திருவாட்டி வில்லிஸ்.

தேசியக் கட்சித் தலைவர்கள், வலுவான பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவியவர் அவர்.

2008, 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களின்போது, நேரடி விவாதங்களில் முறையே திருவாட்டி ஹெலன் கிளார்க்கையும் திருவாட்டி ஜெசிந்தா ஆர்டனையும் தேசியக் கட்சித் தலைவர்கள் விவாதங்களில் சந்திக்க திருவாட்டி வில்லிஸ் உதவினார்.

கொவிட்-19 கிருமிப்பரவல், 2023இன் தொடக்கத்தில் சூறாவளியால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றால் நியூசிலாந்தின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது.

நிதி நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நேரத்தில், திருவாட்டி வில்லிஸின் பணி சவால்மிக்கதாக அமையும் என்று கருதப்படுகிறது. அதைத் திறம்படச் செய்யவிருப்பதாக அவர் சூளுரைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்