கியவ்: போரின் துவக்கத்தில் ரஷ்யப் படைகளிடம் இழந்த பல நிலப்பகுதிகளை தனது ராணுவப் படைகள் கைப்பற்றிவிட்டதாக திங்கட்கிழமையன்று உக்ரேன் தெரிவித்தது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் பல இடங்கள் மீண்டும் தனது கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டதாகவும் தெற்குப் பகுதியில் தனது ராணுவப் படைகள் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி வருவதாகவும் உக்ரேன் கூறியது.
தலைநகர் கியவின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யப் படைகளிடமிருந்து உக்ரேன் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் பதிலடித் தாக்குதல்கள் நடத்த தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. மெதுவாக இருந்தாலும் சீரான முறையில் இழந்த இடங்களைக் கைப்பற்றி வருவதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
உக்ரேனின் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்படுவதாகவும் பல உத்திபூர்வப் பிழைகளைக் கொண்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகள் குறைகூறுகின்றன.
இதை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்கவில்லை.

