சிட்னி: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. அதில் 33 பேர் மாண்டனர். பல ஆயிரம் ஹெக்டர் நிலங்கள், காடுகள் தீயில் கருகின.
அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க ஆஸ்திரேலியா கவனமாக உள்ளது.
இருப்பினும் இவ்வாண்டு வெப்பம் சற்று அதிகமாக இருப்பதாலும் வறண்ட வானிலை நிலவுவதாலும் ஆஸ்திரேலியா சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிட்னி நகரில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான் புதர் தீ தொடர்பான பிரச்சினைகள் வரும், அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பள்ளிகள் விடுமுறையை அறிவிக்கும்.
ஆனால் இப்போதே சிட்னியில் உள்ள சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
‘எல் நினோ’ வானிலையால் எதிர்பாராத நேரத்தில் கனத்த மழை பெய்கிறது. அதனால் புதர்களில் புற்கள் அதிகமாக வளர்கின்றன. இவை வெப்ப காலத்தில் வறண்டு காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாண்டு ஐரோப்பா, வட அமெரிக்காவில் வெப்பம் கடுமையாக இருந்ததால் ஆஸ்திரேலியாவிலும் அதே நிலை வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியாவின் ஆக அதிக வெப்பமிக்க 10 ஆண்டுகள் பட்டியலில் எட்டு ஆண்டுகள் 2010க்கு பின்னர் பதிவானவை.
காட்டுத்தீ வேகமாகப் பரவாமல் இருக்கவும் அவற்றை விரைவாகக் கட்டுப்படுத்தவும் ஆஸ்திரேலிய தீயணைப்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன.

