சகோதரரின் சாம்பலை நீச்சல் குளத்தில் தூவிய பெண்

1 mins read
beaede80-6b62-4fee-9dcf-fae2c320148a
ஸ்பெயினில் நிகழ்ந்த இச்சம்பவம் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது. - படம்: டிக்டாக்கில் பதிவான காணொளியில் இடம்பெற்ற காட்சிகள்

மட்ரிட்: ஸ்பெயினில் மாண்ட தனது சகோதரரின் சாம்பலை ஒரு பெண் நீச்சல் குளத்தில் தூவியிருக்கிறார். அச்செயல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஸ்பெயினின் இபிஸா நகரில் நிகழ்ந்தது. கூட்டமாக இருந்த நீச்சல் குளத்தில் அப்பெண் சகோதரரின் சாம்பலைத் தூவிய காட்சி காணொளியில் பதிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதம் அக்கொணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அடையாளம் காணப்படாத ஒரு பெண், அதிக ஆழம் இல்லாத நிச்சல் குளத்தில் நின்றபடி சிறிய போத்தலிலிருந்து சாம்பலைப் போல் தென்படும் பொடியை நீரில் தூவுவது காணொளியில் தெரிந்தது. பின்னணியில் ஓடிக்கெண்டிருந்த இசைக்கு ஆடியபடி பெண் சாம்பலைத் தூவியது காணொளியில் பதிவானது.

இபிஸாவில் உள்ள உஷுவாயா எனும் பிரபல கடற்கரை கேளிக்கை நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்