மயாமி: ஒரு விபத்தில் தனது வாயின் பாதிப் பகுதியை இழந்த ஒரு முதலை இப்போது அமெரிக்காவில் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் இந்தப் பெண் முதலை இப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
படகை நீரில் கொண்டு செல்லும் ‘புரொப்பெல்லர்’ இயந்திரத்தால் நிகழ்ந்த ஒரு விபத்தில் முதலையின் வாய்ப் பகுதி துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று அதனை ‘கேட்டர்லேண்ட்’ கேளிக்கைப் பூங்காவிற்குக் கொண்டு வந்த விலங்குகளைப் பிடிக்கும் பணியில் இருப்பவர் கூறியிருக்கிறார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு ‘கேட்டர்லேண்ட்’ இவ்வாறு பதிலளித்தது.
ஃபுளோரிடாவிலும் உலகளவிலும் உள்ள முதலைகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்கும் திட்டத்தை ‘கேட்டர்லேண்ட்’ நடத்தி வருகிறது. அதன்கீழ் இந்த முதலையைப் பாதுகாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.
முதலை பிழைப்பதற்கே வழியில்லை என்று சில நாள்களுக்கு முன்பு நம்பப்பட்டது.