தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மேன்யூவை வீழ்த்திய பயர்ன் மியூனிக்

2 mins read
e3a90aea-ac57-4474-bf5a-2c323e7af4e8
பயர்ன் மியூனிக் குழுவின் ஹேரி கேன் (நடு), மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்களான டியாகோ டாலோட் (இடது), லிசாண்ட்ரோ மார்டினெஸ் இருவரைக் கடந்து கோல் போட முனைகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

மியூனிக்: பயர்ன் மியூனிக் குழுவின் ஹேரி கேன் பெனால்டி வாய்ப்பு மூலம் போட்ட கோல், சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை தனது அணி மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ) குழுவை சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணத்தில் வெற்றி காண உதவியது.

இதன் மூலம் இந்தப் பருவத்தின் முதல் ஆறு ஆட்டங்களில் நான்கில் தோல்வி கண்டுள்ளது மேன்யூ. கடந்த வாரயிறுதியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் தனது சொந்த திடலில் பிரைட்டன் குழுவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட மேன்யூ, பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டு வந்து சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயர்ன் தொடக்கம் முதல் ஆட்டத்தைக் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பயர்ன் குழுவின் லேரோய் மெதுவாக உதைத்த பந்தைப் பிடிக்கத் தவறினார் மேன்யூ கோல் காப்பாளர் ஆண்ட்ரே ஒனானா. அதுவே பயர்னின் முதல் கோலானது. பயர்னின் இரண்டாவது கோலை செர்கே நாபரி போட்டார்.

பிற்பாதி ஆட்டத்தில் மேன்யூவின் ரஸ்முஸ் ஹோய்லண்ட் ஒரு கோல் போட்டு கோல் எண்ணிக்கையைக் குறைத்தார். பின்னர் பயர்னுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹேரி கேன் கோலாக்கினார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் மேன்யூவின் கெசமிரோ ஒரு கோல் போட்டு கோல் எண்ணிக்கையை 3-2 என்று குறைத்தார். பின்னர் பயர்னின் மெத்திஸ் டெல் நான்காவது கோல் போட்டார். ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்த சமயத்தில் கெசமிரோ மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை 4-3 என்ற கோல் கணக்குக்குக் குறைத்தார். இறுதியில் பயர்ன் வெற்றியைத் தனது வசமாக்கிக் கொண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்