தோக்கியோ: ஜப்பானில் சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் காய்ந்த பனிக்கட்டியிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்து குறைந்தது நால்வர் மரணமடைந்தனர்.
இவ்வாறு மாண்டவர்கள், தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருந்த சவப்பெட்டிகளுக்கு மிக அருகே அதிக நேரம் நின்றதாகக் கூறப்படுகிறது. ஜப்பானின் யோமுரி ஷிம்புன் நாளிதழ் இதைத் தெரிவித்தது.
மாண்டோர் 40லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவோமி, ஒக்கினாவா நகரங்களில் உள்ள வீடுகள், மியாகி, மியாஸாக்கி நகரங்களில் இருக்கும் இறுதிச் சடங்கு நிலையங்கள் ஆகியவற்றில் 2018லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்கள் மேலும் காற்றோட்ட நிலையில் இருப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று தலைநகர் தோக்கியோவில் இயங்கும் அகில ஜப்பானிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் ஒத்துழைப்பு (ஸென்சொரன்) உள்ளிட்ட அமைப்புகள் வியாழக்கிழமையன்று குரல் கொடுத்தன. இப்படிப்பட்ட சூழலில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
டிரை ஐஸ் என்பது டிவம் கொண்ட கரியமில வாயுவாகும்.

