ஹங்ஸோ: ஆசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தும் சீனா இவ்விளையாட்டுகளில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பெண்களுக்கான லையிட் வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவு படகு வலித்தல் போட்டியில் சீனாவின் ஸோ ஜியாசியும் சியு சியூபிங்கும் தங்கப் பதக்கம் வென்றனர். போட்டியை முடிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 7 நிமிடம் 6.78 வினாடி.
உஸ்பெகிஸ்தானின் லுயிஸக்கோன் இஸ்லாமோவா, மலிகா டக்மாட்டிவா இணையினர் வெள்ளிப் பதக்கமும் இந்தோனீசியாவின் செல்சி கார்புட்டி, ரஹ்மா முத்தியாரா புத்ரி இணையினர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
சனிக்கிழமை இரவு சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆசிய விளையாட்டுகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

