ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்

1 mins read
e07e0678-d951-489a-8958-547dd25bd5bb
ஐநா பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமையன்று உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ். - படம்:ஏஎஃப்பி
Google News Preferred Icon

சோல்: அண்மையில் ரஷ்ய - வடகொரியத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அடுத்த மாதம் வடகொரியா செல்வதாக யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

திரு லாவ்ரோவ் அக்டோபரில் தலைநகர் பியோங்யாங்கிற்குச் செல்வார் என்று ரஷ்யாவின் உயர்மட்ட தூதர் சனிக்கிழமை நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாக அச்செய்தி குறிப்பிட்டது.

வடகொரியாவின் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான உச்சநிலை மாநாட்டிற்காக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா சென்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற இருநாட்டுத் தலைவர்களின் முதல் சந்திப்பில். உக்ரேனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைக்கு உதவ வடகொரியா ஆயுதங்களை வழங்குவது பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கலாம் என்று அமெரிக்கா கூறியது.

வட கொரிய வருகைக்காக திரு கிம்மின் அழைப்பை திரு புட்டின் ஏற்றுக்கொண்டார். இது திரு லாவ்ரோவின் பயணத்திற்கான நோக்கமாக இருக்கலாம் என்று யோன்ஹாப் செய்தி கூறியது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவது அனைத்துலக சட்டங்களுக்கு எதிரானதும், அபாயகரமானதும் ஆகும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாவடகொரியா