வடகொரியா: அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பது இயல்பானது

1 mins read
62b6eebd-93ad-435b-8db2-ac1bc9f860dc
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலின் கருத்துகளுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்தது. - படம்: தமிழ் முரசு

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அண்மையில் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யாவுடன் வடகொரியா ஒத்துழைப்பதைத் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் சாடினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா தனது அண்டை நாடு என்றும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பது இயல்பானது என்றும் அது தெரிவித்தது.

தென்கொரிய அதிபர் அமெரிக்காவின் கைப்பாவையாக நடந்துகொள்வதாக வடகொரியா கடிந்துகொண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்