தைப்பே: தைவானில் கடந்த வாரயிறுதியில் கோல்ஃப் பந்து தயாரிக்கும் ஆலை ஒன்றில் தீ மூண்டது.
இந்தத் தீச்சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தைவானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்டோரில் நான்கு தீயணைப்புப் படை அதிகாரிகளும் அடங்கும்.
ஆலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அவர்கள் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆலையில் தீ மூண்டது. இரவு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒருவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவான் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணிக்கு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
20 நிமிடங்கள் கழித்து, இன்னொரு வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.