தைப்பே: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை 2027ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய தைவான் திட்டமிட்டு உள்ளது.
ஏவுகணையைப் பாய்ச்சக்கூடியனவாக அந்த நீர்மூழ்கிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு எதிரான தற்காப்பை வலுப்படுத்தவும் அவசியமான விநியோகத் தொடர் பாதைகளைப் பாதுகாக்கவும் தைவானுக்கு இந்த ஏற்பாடு அவசியம் என்று நீர்மூழ்கித் திட்டத்திற்கான தலைவர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தைவான் அதிபர் பொறுப்பை ஏற்றபோது சை இங்-வென் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவது திட்டம். அவற்றில் முதலாவது நீர்மூழ்கி, வரும் வியாழக்கிழமை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்களையும் நிபுணத்துவத்தையும் தழுவி இவை தயாரிக்கப்படுகின்றன.
அரசதந்திர ரீதியில் தனித்துவிடப்பட்ட தைவானுக்கு இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
வியாழக்கிழமை தொடக்கம் காணும் முதலாவது நீர்மூழ்கி தயாரிப்புக்கான செலவு கிட்டத்தட்ட 49.36 பில்லியன் தைவானிய டாலர் (S$2.1 பில்லியன்).
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் ஆயுத, தற்காப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினின் போர்த்திறன்களை இந்த நீர்மூழ்கி பயன்படுத்தும் என்று திட்டத் தலைவர் அட்மிரல் ஹுவாங் ஷு-குவாங் தெரிவித்தார். தைவானிய அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.