தென்கொரியாவின் பலம் காட்டிய ராணுவ அணிவகுப்பு

2 mins read
53f3f689-b0fc-4b6c-8610-95e86fbd6f0c
நாட்டின் ராணுவத் திறனைக் காண கொட்டும் மழையிலும் மக்கள் சாலைகளில் வரிசைபிடித்தனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

சோல்: கனமழையில் நனைந்துகொண்டிருந்த படையினரிடம் உரையாற்றிய அவர், “வடகொரியா அணுவாயுதங்களைப் பயன்படுத்தினால், தென்கொரிய-அமெரிக்கக் கூட்டணியின் பெரும் பதிலடியால் அதன் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படும்,” என்றார்.

முழு நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான படைகளும் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளும் இடம்பெற்றன. தென்கொரியத் தளத்தில் இருக்கும் 28,500 அமெரிக்க வீரர்களில் 300 பேர் அணிவகுப்பில் பங்கேற்றதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

சோல் நகரின் முக்கிய வணிக மையம் வழியாக, அந்நகரின் மையத்தில் இருக்கும் அரண்மனைக்கு நுழைவாயிலாக இருக்கும் பரபரப்பான குவாங்வாமுன் பகுதிவரை இரண்டு கிலோமீட்டர் அணிவகுப்பு நடத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.

படைகள், பீரங்கிகள், ஏவுகணைகள், நீருக்கடியில் ஆளில்லா விமானங்களின் அரிய காட்சியை அருகிலிருந்து பார்க்க, மழையில் நனைந்தபடியே தெருக்களில் மக்கள் வரிசையாக நின்றனர்.

தென்கொரியா கடைசியாக 2013ல் ராணுவ வீதி அணிவகுப்பை நடத்தியது. ஆயுதப் படை தினமான அக்டோபர் 1ஆம் தேதி மற்றொரு முக்கிய தேசிய விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் அணிவகுப்பு முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியாமீது கடுமையான நிலைப்பாட்டை திரு யூன் எடுத்துள்ளநிலையில், வடகொரியாவின் வளர்ந்து வரும் அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்களை எதிர்ப்பதற்கான உத்திபூர்வ நடவடிக்கையாக இந்த அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

பியோங்யாங்கின் எத்தகைய தாக்குதல் நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று திரு யூன் உறுதியளித்துள்ளார், 2022ல் பதவியேற்றதிலிருந்து வாஷிங்டன், தோக்கியோவுடன் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளார்.

சோலின் புறநகரில் உள்ள விமானத் தளத்தில் தொடங்கிய அணிவகுப்பில் நவீன ஏவுகணைகளும் இடம்பெற்றன.

வடகொரியத் தலைவர் கிம் ரஷ்யாவுக்குப் பயணம் சென்று திரும்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.

திரு கிம்மும் ரஷ்ய அதிபர் புட்டினும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

உக்ரேன் மீதான போருக்கான உதவிக்கு ஈடாக வடகொரியாவின் ஆயுதத் திட்டங்களை மேம்படுத்த ரஷ்யா உதவினால், அது ‘நேரடியான ஆத்திரமூட்டும் செயல்’ என்று திரு யூன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்