மலேசிய அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றம்

1 mins read
d16c4e2f-5646-4e2f-b003-0822967d8847
மலேசியாசில் புதிய வரவுசெலவுத் திட்டம் அக்டோபர் 13ஆம் தேதி தாக்கலாகிறது. அதற்கு முன்பே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றம் இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்பிலான விவாதிப்புகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம் என்றும் அநேகமாக செப்டம்பருக்கும் அடுத்த மாதத் தொடக்கத்திற்கும் இடையில் மாற்றம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சரவையுடன் சம்பந்தப்பட்டவர்கள் நம்புகிறார்கள்.

மலேசியாவின் வரவு செலவுத் திட்டம் 2024 அக்டோபர் 13ஆம் தேதி தாக்கலாகிறது.

அதற்கு முன்னதாகவே அமைச்சரவையில் மாற்றம் இடம்பெற்றுவிடும் என்று புத்ராஜெயாவில் நம்பிக்கை நிலவுகிறது. பிரதமர் அன்வார் இந்த வாரமே அது பற்றி அறிவிக்கக்கூடும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு அநேகமாக செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகக்கூடும் என்று ஐக்கிய அரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர் கோடிகாட்டினார்.

வரவு செலவுத் திட்டம் தாக்கலாவதற்கு முன் அமைச்சவையில் மாற்றம் இடம்பெற்றால்தான் அது சரியாக இருக்கும். அப்போதுதான் அதற்கு ஏற்ப எல்லா அமைச்சுகளுக்கும் பிரதமர் ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்