ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனான 28 வயது திரு கேசாங் பெங்காரெப், இந்தோனீசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் இளையரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் கட்சியில் இணைந்து வெறும் இரண்டு நாள்களில் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனீசிய ஒருமைப்பாட்டுக் கட்சியை முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளரான கிரேஸ் நெட்டாலி 2014ஆம் ஆண்டில் நிறுவினார்.

