காஸ்மெட்டிக் சிகிச்சையில் குளறுபடி; மலேசிய இல்லத்தரசி மரணம்

1 mins read
fc342fb3-44df-4556-8c8e-5aae825e79a4
சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய திருவாட்டி டான் வெய் ஷானுக்கு தலைசுற்றலும் நெஞ்சுப்பகுதியில் வலியும் ஏற்பட்டது. - படம்: தமிழ் முரசு

ஜோகூர் பாரு: மார்பகத் தோற்றத்தை மெருகூட்டும் ‘காஸ்மெட்டிக்’ சிகிச்சை செய்துகொண்ட மலேசிய இல்லத்தரசி ஒருவர் மரணமடைந்தார். அந்த சிகிச்சையின்போது ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக 29 வயது டான் வெய் ஷான் மாண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று அவர் அந்த சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

வீடு திரும்பியதும் அவருக்கு தலைசுற்றல், நெஞ்சுப்புகுதியில் வலியும் வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

அத்தகைய சிகிச்சையை அளிக்க உரிமம் இல்லாத பெண் ஒருவர் திருவாட்டி டானுக்கு அந்த காஸ்மெட்டிக் சிகிச்சையை அளித்ததாக நம்படுகிறது.

அவர் தலைமறைவாகிவிட்டார்.

அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஜோகூர் மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்