தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகளுக்குப் பிறப்புரிமை கூடாது; ராமசாமி வாதம்

1 mins read
c2926ab5-c57a-4def-bed3-94add84e9d5e
இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் பேராளர்கள் கலந்துகொண்ட அதிபர் தேர்தல் வேட்பாளர் விவாதிப்புக் கூட்டத்தில் பேசினார். - படம்: ஐஏஎன்எஸ் 

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிட இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி விரும்புகிறார்.

குடியரசு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான பல சுற்று விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் இரண்டாவது விவாதத்தில் கலந்துகொண்டு ராமசாமி பேசினார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கலிஃபோர்னியாவில் உள்ள டோனல்டு ரீகன் அதிபர் நூலகத்தில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் புதன்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ராமசாமியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை முடிவுக்கு வரவேண்டும்.

இதுவே எனது விருப்பம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதிக்குப் பிறந்த 38 வயதான விவேக் ராமசாமி, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கக்கூடாது என்றார்.

அத்தகைய பிள்ளைகளின் பெற்றோர் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்து இருக்கிறார்கள் என்பதே அதற்கான காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்