தோக்கியோ: செயலிழந்துபோன ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையிலிருந்து இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் கழிவு நீர் வெளியேற்றப்படவுள்ளது. ஆலையை நடத்தும் அமைப்பு இதனைத் தெரிவித்தது.
ஃபுக்குஷிமா ஆலையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. அந்நடவடிக்கையைத் தொடர்ந்து சீனா உள்ளிட்ட நாடுகள் கோபத்துக்கு உள்ளாயின.
2011ஆம் ஆண்டில் ஜப்பானைத் தாக்கிய பெரும் சுனாமி அலையால் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலைக்குள் 1.34 டன்கள் அளவிலான கழிவு நீர் சேர்ந்தது. அந்த நீரின் ஓர் அளவை ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று ஜப்பான் பசிபிக் பெருங்கடலுக்குள் வெளியிட்டது.
“முதலில் கழிவு நீரை வெளியேற்றிய பிறகு நடத்தப்பட்ட சோதனைகள் நிறைவடைந்துவிட்டன. அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று இரண்டாவது முறையாக கழிவு நீர் வெளியேற்றப்படும்,” என்று ஜப்பானின் தோக்கியோ இலெக்ட்ரிக் பவர் கம்பனி (தெப்கோ) எனும் மின்சார நிறுவனம் தெரிவித்தது.