மலேசியாவின் 11 விரைவுச்சாலைகளில் புதிய சாலைக் கட்டண முறை அறிமுகம்

மலேசியாவின் 11 விரைவுச்சாலைகளில் புதிய சாலைக் கட்டண முறை அறிமுகம்

1 mins read
e505e64d-0f08-4288-a562-5aa0cbbc426e
தற்போதுள்ள சாலைக் கட்டணம் செலுத்தும் முறைகளான ‘டச் அண்ட் கோ’, ஸ்மார்ட் பட்டை, ரேடியோ அலைவரிசை அடையாள அட்டை ஆகியவற்றுக்கு உதவியாக இந்த எஸ்பிடி முறை விளங்கும். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவின் 11 விரைவுச்சாலைகளில் சாலைக் கட்டணத்தைச் செலுத்த வாகனமோட்டிகள் தங்கள் பற்று அட்டை, கடன் அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்த வழிவகுக்கும் புதிய முறை (எஸ்பிடி) வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிமுகமானது.

அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை, கத்ரி காரிடோர் விரைவுச்சாலை, சுங்கை பெசி விரைவுச்சாலை, புதிய பந்தாய் விரைவுச்சாலை, பட்டர்வோர்த்-கூலிம் விரைவுச்சாலை, டமான்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை, மேற்கு கோலாலம்பூர் போக்குவரத்துத் திட்ட விரைவுச்சாலை, ஷா ஆலம் விரைவுச்சாலை, ஸ்மார்ட் சுரங்கச்சாலை, கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை, டுட்டா-உலு கிள்ளான் விரைவுச்சாலை ஆகியவையே அந்த 11 விரைவுச்சாலைகள்.

தற்போதுள்ள சாலைக் கட்டணம் செலுத்தும் முறைகளான ‘டச் அண்ட் கோ’, ஸ்மார்ட் பட்டை, ரேடியோ அலைவரிசை அடையாள அட்டை ஆகியவற்றுக்கு உதவியாக இந்த எஸ்பிடி முறை விளங்கும் என்று பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி குறிப்பிட்டார்.

“சில சமயங்களில் சாலைக் கட்டணம் செலுத்தவதற்கு ‘டச் அண்ட் கோ’ அட்டையில் பணம் போதிய பணம் இல்லாமல் போகலாம். ஆகவே, இந்தப் புதிய முறையால் அந்தப் பிரச்சினைக்கே இடமில்லை.

“எதிர்காலத்தில் பல தடங்கள் கொண்ட தடையற்ற போக்குவரத்து சீராக அமைந்திட, எஸ்பிடி முறை ஒரு முதற்படி,” என்று அமைச்சர் நன்டா, வெள்ளிக்கிழமை சுங்கை பெசி விரைவுச்சாலையில் உள்ள லோக் இயூ சாலைக் கட்டண வளாகத்தில் எஸ்பிடி முறையை அறிமுகப்படுத்தி உரையாற்றிபோது இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்