ஐரோப்பாவில் அக்டோபர் முதல் பாதியில் வழக்கமான கடும் குளிர் இராது

2 mins read
89235d78-48d1-4b5b-870e-6e802a7003f6
ஐரோப்பாவைப் பொறுத்தவரை அக்டோபர் முதல் தேதியிலேயே மின்சாரத் தேவை கூடிவிடும். ஆனால், இப்போது வெப்பநிலை சராசரி அளவைவிட கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பதால் வீடுகளில் குளிரை அகற்றுவதற்கான சாதனத்தை இயக்க வேண்டிய தேவை  இப்போதைக்கு இருக்காது. - படம்: ராய்ட்டர்ஸ் 

பாரிஸ்: ஐரோப்பாவில் அக்டோபர் மாத வெப்பநிலை நீண்டகால சராசரி அளவைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல குடும்பங்களும் தங்கள் வீடுகளில் கதகதப்பான சூழ்நிலையைக் கட்டிக்காக்க அதற்கான கருவிகளை இப்போதைக்கு குறைந்தபட்சம் கொஞ்ச நாட்களுக்காவது இயக்க வேண்டிய தேவை இருக்காது என்று தெரிகிறது.

பொதுவாகவே ஐரோப்பாவில் அக்டோபர் 1ஆம் தேதி பிறந்தால் பனிக்காலம் தொடங்கிவிடும். வீடுகளின் உள்ளே குறிப்பிட்ட வெப்பநிலையை நிலைநாட்டி வரும் வகையில் சாதனங்களை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிடும். அதனால் மின்சாரத் தேவை கூடும்.

ஆனால், ஐரோப்பாவில் அக்டோபர் மாத முதல் பாதியில் வெப்பநிலை சராசரி அளவைவிட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பாவின் பெரும் பகுதிகளிலும் அக்டோபர் முதல் பாதியில் வெப்பநிலை சராசரி அளவைவிட கொஞ்சம் கதகதப்பாகவே இருக்கும் என்றும் வானிலை நிலையங்கள் கணித்து இருக்கின்றன.

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போர் நீண்டு வருகிறது. ரஷ்யா ஐரோப்பாவுக்கு குறைந்த செலவில் எரிவாயுவை குழாய் மூலம் அனுப்பி வந்தது.

உக்ரேன் போர் காரணமாக இது பாதிக்கப்பட்டது. என்றாலும் ஐரோப்பா இப்போது போதிய அளவுக்குத் திரவ இயற்கை எரிவாயுவைச் சேமித்து வைத்து இருக்கிறது.

அதோடு மட்டுமன்றி, எரிவாயுவும் போதிய அளவுக்கு இருக்கிறது. சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதால் இப்போதைக்கு ஐரோப்பாவுக்குக் கவலை தேவையில்லை என்று தெரிகிறது.

ஐரோப்பாவில் விரைவில் பனிக்காலம் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்