தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் பல மாநிலங்களில் புகைமூட்டம்

2 mins read
f154dcb9-758d-44ff-8a9d-9d01c9c679e1
கோலாலம்பூர் நகரத்தில் உள்ள புகைமூட்டம். - படம்: இபிஏ

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பல மாநிலங்களில் புகைமூட்டம் மோசமடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நிலவரப்படி ஜோகூரில் உள்ள இரு மாவட்டங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லார்கின், பத்துபகாட் ஆகிய இரு மாவட்டங்களில் முறையே காற்று மாசுக் குறியீடு 156, 115 எனப் பதிவாகியுள்ளது.

ஞாயிறு காலை 9.00 மணியிலிருந்து லார்கினில் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது என்று ஜோகூர் மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

ஜோகூரில் உள்ள பல மாவட்டங்களில் இதே நிலைமை நீடிக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் காற்று மாசுக் குறியீடு 90ஆக உள்ளது.

மலேசியா முழுவதும் பல மாநிலங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சாபா, சரவாக்கில் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் மிதமான அளவுக்கு காற்றின் தரம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஆசியான் நாடுகளில் எல்லைகளைத் தாண்டிய புகைமூட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்தோனீசியாவின் கலிமந்தான் காடுகளில் எரியும் புகையால் மோசமடையும் புகைமூட்டத்துக்கு ஆசியான் நாடுகள் தயாராகி வருகின்றன.எச்சரிக்கை நிலை 2க்கு உயர்த்தும் அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாகவே ஆசியான் நாடுகளில் மிதமானது முதல் அடர்த்தியானது வரை புகைமூட்டம் காணப்படுகிறது.

இவ்வட்டாரத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுகிறது. புகைமூட்டப் பகுதிகளிலிருந்து வீசும் காற்று ஆசியானை நோக்கி வருகிறது.

கலிமந்தானிலிருந்து வரும் புகை, அடுத்த சில நாட்களில் சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கும் என்று மலேசிய வானிலை நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.

ஆசியான் சிறப்பு வானிலை நிலையத்தில் (ஏஎஸ்எம்சி) சனிக்கிழமை பதிவான துணைக்கோள படங்களை சுட்டிக்காடிய அவர், மலேசியாவில் புகைமூட்டத்தை ஏற்படுத்தும் பகுதிகள் இல்லை என்றார்.

“இருப்பினும், கலிமந்தானில் 353 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமத்ராவில் மட்டும் 113 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

மலேசியாவுக்கு அருகில் உள்ள இந்தோனீசியப் பகுதியான சுமத்ராவிலும் எச்சரிக்கை நிலை 2க்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஏஎஸ்எம்சி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது.

காற்றின் தரத்தை கண்காணிப்பது, குறிப்பாக திறந்தவெளியில் எரிப்பது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது, வறண்ட நிலப் பகுதிகள் தீப்பற்றி எரிவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்