மாலே: மாலத் தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு, இந்திய ஆதரவு வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.
சனிக்கிழமை நடந்த தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகம்மது முய்சு வெற்றி பெற்றுள்ளார். இதனால் மாலத் தீவுடான இந்தியாவின் உறவு கைநழுவியிருக்கிறது.
முய்சு, 45, சுமார் 54,06 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
“அதிபர் வேட்பாளராக தேர்வு பெற்ற முய்சுக்கு வாழ்த்துகள்,” என்று எக்ஸ் ஊடகத்தில் தோல்வியடைந்த இப்ராஹிம் முஹம்மட் சோலி தெரிவித்திருந்தார்.
நாட்டில் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெற்ற தேர்தலுக்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஞாயிறு காலை தமது கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ முய்சு ஆரவாரத்துடன் காணப்பட்டார்.
வரும் நவம்பர் 17ஆம் தேதி அவர் அதிபராகப் பொறுப்பு ஏற்பார். அதுவரை சோலி, 61, இடைக்கால அதிபராக நீடிப்பார்.
இந்தத் தேர்தல் மூலம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதவியேற்றதில் இருந்து நாட்டின் அரசதந்திர நிலைப்பாட்டை புதுடெல்லியை நோக்கித் திரும்பச் செய்வதற்கான சோலியின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் சீன ஆதரவாளரான முய்சு, சீனாவுடனான உறவை பலப்படுத்துவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.