நியூசிலாந்து பிரதமருக்கு தொற்று;ஸூம் வழியாக பணியை தொடர்வார்

நியூசிலாந்து பிரதமருக்கு தொற்று;ஸூம் வழியாக பணியை தொடர்வார்

1 mins read
28765826-440a-4dc4-a2fd-98d664b5939e
நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்சுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஸூம் வழியாக தம் பணிகளைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரு ஹிப்கின்சுக்கு சனிக்கிழமை அன்று சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அடுத்த ஐந்து நாள்களுக்கு அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார், ஸூம் வழியாக அவர் தம் பணிளைச் செய்வார் என்று ஞாயிற்றுக் கிழமை அவரது அலுவலகம் தெரிவித்தது.

இம்மாதம் 14ஆம் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. திரு ஹிப்கின்சின் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற போராடி வரும் வேலையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக அவர் சில நாட்கள் பிரசாரத்திலிருந்து ஒதுங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை திரு ஹிப்கின்ஸ், ஆக்லாந்தில் உள்ள சமோவான் தேவாலய வழிபாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவருக்குப் பதிலாக துணைப் பிரதமர் கார்மல் செபுலோனி கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் எஞ்சிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியது, ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது தொற்று இருப்பது சோதனையில் உறுதியானால் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூசிலாந்தின் சுகாதாரத் துணை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்