பாலியல் கல்விக்கு எதிராக பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம்

பாலியல் கல்விக்கு எதிராக பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம்

1 mins read
662e11a4-a612-4a0f-8ec7-3e0ccb758280
பிள்ளைகளுக்குப் பெற்றோர்தான் பாலியல் உறவு பற்றி கற்றுத்தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். - படம்: தமிழ் முரசு

புரசல்ஸ்: பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதை எதிர்த்து பெல்ஜியம் தலைநகர் புரசல்சில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாட்டில் உள்ள பிரஞ்சுமொழி பேசப்படும் பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டுதோறும் இரண்டு மணி நேரத்துக்கு பாலியல் கல்வி நடத்தப்படும்.

பாடத்தின்போது பாலியல் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.

ஆனால், இவ்வாண்டு பள்ளிப் பருவம் தொடங்கியதும் பிரச்சினை தொடங்கியது.

இஸ்லாமிய, கத்தோலிக்க அமைப்புகள் உள்பட சில அமைப்புகள் இந்தப் பாலியல் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தப் பாடத்தை எதிர்த்து நான்கு பள்ளிகளுக்குத் தீ மூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெல்ஜியம் நீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

பிள்ளைகளுக்குப் பெற்றோர்தான் பாலியல் உறவு பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பள்ளிகள் அல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்