தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூகலுக்குப் பதிலாக மாற்றுத் தளத்தை நாடிய ஆப்பிள்

1 mins read
b449eedb-210d-4494-88cd-200f45911fc3
டக்டக்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆப்பிள் நிறுவனம். - படம்: ராய்ட்டர்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், அல்ஃபபெட் நிறுவனத்தின் பிரபல கூகல் இணையத் தேடல் தளத்துக்குப் பதிலாக டக்டக்கோ தளத்தைப் பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் பயன்படுத்தும் சஃபாரி மென்பொருளில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த (பிரைவேட் மோட்) டக்டக்கோவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக இந்த விவகாரத்தை அறிந்த சிலர் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைத் தொடர்பிலான விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகலுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா நீதிமன்ற வழக்கில் டக்டக்கோ தலைமை நிர்வாக அதிகாரி கேப்ரியல் வென்பர்க், ஆப்பிள் அதிகாரி ஜான் ஜியானாண்ட்ரயா ஆகியோரின் வாக்குமூலங்களை வெளியிடப்போவதாக புதன்கிழமையன்று நீதிபதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்