சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு: மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறப்பு

1 mins read
c6db5984-0ae9-4e97-8c0d-70b39d1c05b6
நியூசிலாந்தின் குவீன்ஸ்டவுன் விமான நிலையம், வெள்ளிக்கிழமை காலை சில மணி நேரம் மூடப்பட்டிருந்தது. - குவீன்ஸ்டவுன் விமான நிலையம்/ஃபேஸ்புக்

வெலிங்டன்: சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்த நியூசிலாந்தின் குவீன்ஸ்டவுன் விமான நிலையம், சில மணி நேரம் கழித்து மீண்டும் திறந்தது.

செயல்பாடுகளைத் தொடர பாதுகாப்பானது என்று குடிமைத் தற்காப்புப் படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக குவீன்ஸ்டவுன் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

முன்னதாக, குவீன்ஸ்டவுன் விமான நிலையத்தில் சந்தேகத்திற்குறிய வெடிபொருள் இருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அங்கு வரும், அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

நியூசிலாந்தின் தென்தீவில் தெற்கே உள்ள குவீன்ஸ்டவுன், பனி மலைகள் கொண்ட பகுதியாகும். வெளிநாட்டுப் பயணிகளிடையே அந்த இடம் பிரபலம்.

குறிப்புச் சொற்கள்