தெற்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில் டெங்கிக் காய்ச்சல் அதிகரிக்கலாம்

2 mins read
01b9f2ee-cd80-4e79-988c-eddf5e493367
டெங்கியால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் தலைநகர் டாக்கா சாலையோரத்தில் தேங்கி நிற்கும் நீரில் பரவும் கொசுக்கள்.  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: டெங்கி காய்ச்சல் , அமெரிக்காவின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் பாதிக்கும் என்று உலகச் சுதாதார நிறுவனத்தின் விஞ்ஞானி கூறியுள்ளார்.

மேற்குறித்த நாடுகளில் உள்ள வெப்பநிலையானது கொசுக்களுக்கு டெங்கியைப் பரப்பும் சூழலை அதிகரிக்கிறது.

லத்தின் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் டெங்கியினால் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய நிலையில் இந்நோய் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் எட்டு மடங்கு கூடிவிட்டது. மக்கள் நகரங்களில் அதிகம் குடியேறுவதும் பருவநிலை மாற்றங்களும் இதற்கு காரணமாக உள்ளன.

பல டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போய்விடுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 4.2 மில்லியன் டெங்கி சம்பவங்கள் உலக அளவில் பதிவாகின. பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த ஆண்டு எல்லைமீறி டெங்கி காய்ச்சல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். தற்போது, பங்களாதேஷ் மிகவும் மோசமான டெங்கி பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. அங்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் டெங்கிக்கு உயிரிழந்துவிட்டனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் ஜெரமி ஃபாரார், டெங்கிக்கு எதிராக வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் உலக சுகாதர அமைப்பில் 2023ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். பல பெரிய நகரங்களில் வரப்போகும் கூடுதல் நெருக்கடிகளை எதிர்காலத்தில் கையாளுவதற்கு நாடுகளைத் தயார்படுத்த வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்