ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டின் மத்திய, தெற்குப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் எறிபடை தாக்குதல் பற்றி எச்சரிக்கும் அபாய சங்கு ஒலித்ததாகவும் பிறகு சரசர என எறிபடைகள் பாய்ந்த சத்தத்தைக் கேட்க முடிந்ததாகவும் சம்பவத்தை நேரே பார்த்தவர்கள் கூறினர்.
இஸ்ரேலுடன்கூடிய எல்லை வேலி நெடுகிலும் ஆயுதக் கைகலப்பு சத்தத்தைக் கேட்டதாக காசா பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு ஆயுதப் படையினர் அதிகம் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.
இருந்தாலும் இஸ்ரேல் ராணுவம் வேறு தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
காசா அருகே தெற்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டன. மருத்துவ ஊழியர்களும் சென்றனர். வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இருந்தாலும் உயிருடற் சேதம் பற்றி தகவல் எதுவும் இல்லை.
பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்திக்கப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவிப்பு விடுத்தார்.
தாக்குதலுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டதாக எந்தத் தரப்பிடம் இருந்தும் தகவல் இல்லை.