புகைமூட்டத்தைத் தடுக்க வலுவான நடவடிக்கை; மலேசியா பரிசீலனை

1 mins read
d83d9bc7-0e3e-4f83-b1bc-032e1c28a592
கோலாலம்பூரின் ஆகாய வெளியை அக்டோபர் 3ஆம் தேதி சூழ்ந்திருந்த புகைமூட்டம். - படம்: ராய்ட்டர்ஸ் 

கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது என்று அந்த நாட்டின் சுற்றுப்புற அமைச்சர் நாஸ்மி அகம்மது சனிக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் காட்டுப் பகுதிகளில் தீ மூண்டு இருப்பதே மீண்டும் புகைமூட்டம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்றார் அவர்.

இதனிடையே, சுமத்ரா, களிமந்தானில் 35 பெரிய பண்ணை இடங்களை மூடிவிட்டதாக சனிக்கிழமை இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடங்களே புகை கிளம்புவதற்கு மூல இடங்களாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்