ஹாங்காங்கில் ‘கொய்னு’ சூறாவளி

ஹாங்காங்கில் ‘கொய்னு’ சூறாவளி

1 mins read
b5b2f42f-adc9-48f2-9f75-83fdfc86eb15
கொய்னு சூறாவளி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவரின் குடையைக்கூட பலத்த காற்று விட்டுவைக்கவில்லை. - படம்: ஏஏஃப்பி

ஹாங்காங்: கொய்னு சூறாவளி நெருங்குவதால் ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் முதல் பிற்பகல் இரண்டு மணி வரை புயல் எச்சரிக்கை 3வது ஆக உச்சநிலைக்கு உயர்த்தப்படுகிறது என்று ஞாயிற்றுக் கிழமை காலை ஹாங்காங் எச்சரித்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண் 8 அறிகுறி என்பது அதன் ஐந்து அளவுகோலில் 3வது உச்ச எச்சரிக்கை நிலையாகும். அந்த நிலையில் ஹாங்காங் நகரம் முழுமையாக மூடப்படும். சுரங்கப் பாதை ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

ஞாயிற்றுக் கிழமை ‘கொய்னு’ சூறாவளி ஹாங்காங்கின் தெற்குப் பகுதியில் அதிகபட்சமாக 100 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நிதி வட்டாரத்தின் பல பகுதிகள் பாதிக்கப்படும் என்று ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்தது. ஞாயிற்றுக் கிழமையைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்