தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்’

1 mins read
c55ce9f8-4a9e-4c7c-bbf9-31e48eb11ac2
குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளை எச்சரித்துள்ள அதன் இயக்குநர் முஹமட் ஷுஹைலி. - படம்: த ஸ்டார் இணையம்

கோலாலம்பூர்: “நீங்களாகவே மாற வேண்டும் அல்லது மாற்றப்படுவீர்கள்,” என்று மலேசிய காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

“உங்கள் இயக்குநரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்டு நடக்க வேண்டும். குற்றவியல் விசாரணைகளின் பொறுப்பு அதிகாரியையோ அல்லது மாநிலக் காவல்துறைத் தலைவரையோ அல்ல,” என்று மலேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் முஹமட் ஷுஹைலி முஹமட் ஸைன் கூறியுள்ளார்.

“இங்கே உட்கார்ந்து எங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் மாற வேண்டும் அல்லது மாற்றப்படுவீர்கள், நான் பணம் கேட்கவில்லை. வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சொந்த நலனுக்காக வேலை செய்பவர்களால் தமக்கு எந்த பலனும் இல்லை என்று கூறிய முஹமட் ஷுஹைலி, இத்தகைய அதிகாரிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

பினாங்கில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் திரு முஹமட் ஷுஹைலி உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்