வாஷிங்டன்: சுற்றுச்சூழல் வழக்கறிஞர், தடுப்பூசிக்கு எதிரானவர், முன்னாள் செனட்டரின் மகனுமாகிய ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதை அவர் கைவிட்டுள்ளார்.
கடந்த மாதம் பிற்பகுதியில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அச்சாரமாக அமெரிக்க அரசியல் மாற்றத்திற்கு உறுதியளித்து யூடியூபில் காணொளிப் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
கடந்த வாரம் வெளியான ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பின்படி, அவர் ஏழு அமெரிக்க வாக்காளர்களில் ஒருவரின் ஆதரவைப் பெற முடியும் என்றும் ஜோ பைடன், டிரம்ப் வாக்குகளை அவர் கைப்பற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் செயின்ட் லூயிசில் கூடிய ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

