இஸ்ரேலின் தற்காப்புக்கு 2 டுரோன் விமானங்கள்:ஜெர்மனி அறிவிப்பு

1 mins read
acecae36-08a3-4093-9420-6a9c5555a4f5
காசாவில் கடந்த செப்டம்பர் 20 அன்று ஆளில்லா (ராணுவ) வானூர்தி இயங்கிக்கொண்டிருக்க, பாலஸ்தீனர்கள் இஸ்ரோலியர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.   - படம்: ராய்டர்ஸ்

பாரிஸ்: தமது விமானப் படை பயன்படுத்தும் இரு ஹெரான் ஆளில்லா (ராணுவ) வானூர்தி (டுரோன்) விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜெர்மனிய தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்தார். அந்த அறிவிப்பு பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்ஸில் வியாழன் அன்று நேட்டோ அமைப்பின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு செய்யப்பட்டது.

“இஸ்ரேல் கேட்டுக்கொண்டபடி, இரு ஹெரான் டுரோன்கள் வழங்கப்படும். மேலும் வெடிபொருட்கள், கப்பல்கள் போன்றவையும் தேவை என்று அறிகிறோம். அதனைப்பற்றி இஸ்ரேலியர்களுடன் தற்போது விவாதிக்கப்போகிறோம். நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம்” என்று பிஸ்டோரியஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்