வரி மோசடி செய்தேன்:முன்னாள் எஃப்1 நிர்வாகி பெர்னி ஒப்புதல்

1 mins read
a1e0f99c-aa24-403f-9300-62a6d3dec01f
எஃப் ஒன் கார் பந்தையக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னி எக்லஸ்டோன். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் எஃப் ஒன் (F1) என்ற உலகப்புகழ் கார் பந்தையக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னி எக்லஸ்டோன், பிரிட்டனின் வரி ஆணையத்திடம் தவறான தகவல்களை அளித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அக்குற்றத்துக்கு அவர் 652 பவுண்ட் (1.1 பில்லியன் வெள்ளி) அபராதம் செலுத்தவேண்டும்.

அடுத்த மாதம் நடக்கவிருந்த விசாரணயை எதிர்த்து வாதாடவிருந்த 92 வயதான பெர்னி, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் விளைவாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

கடந்த 2015ல் நடந்த வரி ஆணைய சந்திப்பில் பெர்னி முறையற்ற விவரங்களைத் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்