தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் வேலையின்மை விகிதம் 3.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது

1 mins read
909b0a69-8746-4188-968a-a58a498cd7b6
வரவுசெலவுத் திட்டம் 2024ஐ தாக்கல் செய்து பேசிய அன்வார் இப்ராகிம். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் வேலையின்மை விகிதம் 3.4 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையில் தெரிவித்துள்ளார். கொவிட் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வேலையின்மை விகிதம் பெரிதும் குறைந்துள்ளது என்றார் அவர்.

வரவுசெலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் சிவகுமார், நாட்டின் வேலையின்மையை குறைப்பதில் தமது அமைச்சு மிகவும் கடுமையாகப் போராடியது என்றார். மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில் நாடு தழுவிய நிலையில் வேலை வாய்ப்புக் கண்காட்சியை நடத்தி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார்வரவுசெலவுத் திட்டம்மலேசியா