ஜோகூருக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் நம்பிக்கை

மலேசிய பட்ஜட் 2024

ஜோகூருக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் நம்பிக்கை

1 mins read
d8a81c21-d3c5-4177-bff4-8573b952a018
அண்மையில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஜோகூர் சென்றபோது அவரை வரவேற்ற மாநில முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காஸி (இடது). - படம் சாவ்பாவ்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்திற்கான திட்டங்கள் முறையாகவும் சீராகவும் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்தது. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்த 2024 வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள மாநிலத் திட்டங்களுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார் ஜோகூர் முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காஸி.

தம் மாநிலத்துக்குத் தேவையான மேம்பாட்டுக் கட்டமைப்புகளை நிதி அறிக்கை உள்ளடக்கியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் சொன்னார். சாலைகள், சுகாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடிப்படை வசதிகளாக அவர் குறிப்பிட்டார். ஜோகூர் மக்கள் பலனடையும் வகையில் இத்திட்டங்கள் அமையும் என்று ஃபேஸ்புக்கில் சனிக்கிழமை திரு ஓன் ஹாஃபிஸ் பதிவிட்டார்.

மலேசியப் பிரதமர் முன்வைத்த ஜோகூர் மாநில மேம்பாடுகளில், சுல்தான் அமினா மருத்துவமனை இரண்டாம் கட்ட விரிவாக்கம், குறிப்பிட்ட சில பகுதிகளில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை 4 தடங்களிலிருந்து 6ஆக விரிவுபடுத்துவது ஆகியவை அடங்கும்.

ஜோகூருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் அடுத்த மாதம் நடைபெறும். அத்திட்டம் மக்கள் நலன் சார்ந்தது எனவும் திரு ஓன் ஹாஃபிஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்