வடகடல் வழித்தட திட்டம்: சீனாவுக்குப் புட்டின் பாராட்டு

பெய்ஜிங்: சீனாவின் உலகளாவிய நிலம், நீர் உள்கட்டமைப்பு, எரிசக்தி வழித்தட கட்டமைப்புத் திட்டம் கிழக்கு மேற்கு இரண்டிற்கும் இடையில் வர்த்தகத்தைப் பெருக்கும்.

ஆகையால், அந்தத் திட்டத்தில் உலக நாடுகள் முதலீடு செய்யவேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கோரிக்கை விடுத்தார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் சீன வின் சாலை, கடல் உள் கட்டமைப்பு, எரிசக்தி கட்டமைப்புத் திட்டக் கருத்தரங்கு நடந்தது.

சீனாவின் அந்த வடகடல் வழித்தட திட்டத்தைத் தீட்டியதற்காக சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் பெரிதும் பாராட்டினார்.

உக்ரேன் போருக்குப் பிறகு இரண்டாவது முறையாக சீனப் பயணம் மேற்கொண்ட அதிபர் புட்டின், தம்மை அழைத்ததற்காக சீன அதிபருக்கு நன்றி கூறினார்.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த புராதன பட்டுவழியை இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் புதுப்பிக்கும் சீனாவின் அந்தத் திட்டத்தில் ரஷ்யா முக்கியப் பணியாற்ற முடியும் என்று அதிபர் புட்டின் கூறினார்.

சீன அதிபரை, ‘அன்புக்குரிய நண்பரே’ என்று ரஷ்ய அதிபர் புட்டின் வர்ணித்தார்.

வடகடல் வழித்தட திட்டத்தின் பேரில் உலகையே கூட்டி இருப்பதாக சீன அதிபரை அவர் புகழ்ந்தார்.

இதனிடையே, அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக அதிபர் புட்டின் எழுந்ததுமே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சில ஐரோப்பிய பிரமுகர்களில் ஒருவரான பிரான்சின் முன்னாள் பிரதமர் ஜீன்-பியாரி ரஃபாரின் அறையை விட்டு எழுந்து வெளியே போய்விட்டார்.

அதைத் தான் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

“உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே சீனாவும் ரஷ்யாவும் உலகில் நிலையான, நீண்டகால பொருளியல் முன்னேற்றத்தையும் சமூக நல்வாழ்வையும் சாதிக்க விரும்புகின்றன.

“சமத்துவ, பரஸ்பர நன்மைக்கான ஒத்துழைப்பு மூலம் அதைச் சாதிக்க இருநாடுகளும் விரும்புகின்றன.

“அதேவேளையில் பன்மயக் கலாசாரத்தையும் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த பாணியில் முன்னேறுவதற்கு உள்ள உரிமையையும் இரு நாடுகளும் மதிக்கின்றன,” என்று அதிபர் புட்டின் தெரிவித்தார்.

சீனா நடைமுறைப்படுத்தும் வடகடல் வழித்தடம் ரஷ்யாவுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. அந்தத் திட்டம் ரஷ்யா முழுவதையும் உள்ளடக்குகிறது என்று அவர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!