ஹனோய்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், விரைவில் வியட்னாமுக்கு வரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் சீனாவின் சாலை, கடல் உள் கட்டமைப்புத் திட்டக் கருத்தரங்கு நடந்தது.
அதில் ரஷ்ய, வியட்னாம் அதிபர்கள் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் சந்தித்தனர்.
வியட்னாமுக்கு விரைவில் வரும்படி ரஷ்ய அதிபரை வியட்னாம் அதிபர் அழைத்தார். அந்த அழைப்பை அதிபர் புட்டின் ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று வியட்னாமிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
ஆசியாவில் உள்ள வியட்னாம் ரஷ்யாவுக்கு நெருக்கமாக இருந்து வரும் நாடு. சோவியத் யுகத்தில் இருந்து இருதரப்பு உறவும் வலுவாக இருந்து வருகிறது. ரஷ்ய ஆயுதங்களை அதிகமாக வியட்னாம் வாங்கி வருகிறது.
“பெய்ஜிங் சந்திப்பின்போது வியட்னாம் அதிபர் வோ வான் துவாங், தன் நாட்டுக்கு விரைவில் வரும்படி ரஷ்ய அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.
“அதை மன மகிழ்ச்சியுடன் அதிபர் புட்டின் ஏற்றுக்கொண்டார்,” என்று அந்த ஊடகம் தெரிவித்தது.
சீனாவில் நடக்கும் கருத்தரங்களில் 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
உலக அளவில் உள்கட்டமைப்பு வசதியையும் எரிசக்தி கட்டமைப்புகளையும் அமைக்கும் தனது திட்டம் பற்றி அந்தக் கூட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் விளக்குகிறார்.

